Sunday, February 22, 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.
காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

"மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால், ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும்" என்று கூறிய அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

Monday, February 16, 2009

சிறிலங்கா அரசின் பொய்யுரைக்கு துணை போகும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்

விடுதலைப்புலிகள் ஆயூதங்களைக் கீழே போட்டால் இலங்கை அரசை வற்புறுத்தி போரை நிறுத்தச் சொல்லலாம் -மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் சொல்லுகிறார்

இப்பிடித்தான் 87ல் இந்தியா அரசு விடுதலைப்புலிகளைக் கட்டாயப்படுத்தி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கச் சொன்னது. விடுதலைப்புலிகள் ஆயூதங்களை இந்தியா அரசுக்கு கொண்டு வந்து கையளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியா உளவு அமைப்பு ரா ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆயூதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை இந்தியா இராணுவ அதிகாரியாக இருந்த கர்கிரட் சிங் சொல்லி இருந்தார்.rediff.com என்ற இணையத்தளத்தில் 97ம் ஆண்டு வந்த இவரின் பேட்டியைப் பார்வையிட


Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble.

Why?

Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything. In the army headquarters there was a core group headed by defence minister, three chiefs and a few senior officers. They used to take decisions, decisions are given to me by the staff officer. Decisions, if I question, the answer will come, These are orders from higher echelons. Higher echelons, that is the famous answer we got. Higher echelons

அத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், மாத்தையாவையும் சுடச்சொன்னார்கள். (பிற்காலத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவரான ஜோனியை நயவஞ்சகமாக இப்படித்தான் கொன்றது காங்கிரஸ் அரசு)

What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.
http://in.rediff.com/news/2000/mar/31lanka.htm

மகிந்தா அரசு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பினை நிராகரித்து விட்டது. அதுபற்றி சிதம்பரம் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் இந்த இணைப்பினை நிராகரிக்கும் போது கூட காங்கிரஸ் அரசு மூச்சுக்கூட விடவில்லை.

உமாமகேஸ்வரன், பாலகுமாரன், சிவசிதம்பரம் எங்கே என்று கேட்கிறார் சிதம்பரம். பாலகுமாரன் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருக்கிறார். அவர் அண்மையில் சிறிலங்காப்படையின் ஏறிகணைத்தாக்குதல்களினால் காயப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறிலங்கா இராணுவத்திற்கு காங்கிரஸ் அரசு ஆயூதங்களை வழங்கி இராணுவ உதவிகளைச் செய்து வருவது தெரிந்ததே.

'A senior leader and special member of the LTTE K.V. Balakumar was seriously injured during an attack by the Sri Lankan army at Udaiyarkattu area in Mullaithivu Monday (jan26) and is admitted to the intensive care unit,

உமாமகேஸ்வரன் இந்திய உளவுத்துறை ராவின் ஆசியுடன் நடாத்தப்படும் ஈ.என்.டி.எல்.எப் யால் கொழும்பில் கொல்லப்பட்டார்.

Uma Maheswaran was assassinated in Colombo. A PLOTE splinter group ENDLF claimed responsibility

சிவசிதம்பரம் கொடிய நோயினால் இறந்தார்.

Mr. Murugesu Sivasithambaram, President of the Tamil United Liberation Front (TULF), the main constituent of the Tamil National Alliance, passed away peacefully early Wednesday morning(05 June 2002) around two at the age of seventy-nine. The death occurred at the Colombo national hospital after a brief illness.

அண்மையில் அவுஸ்திரெலியாவிற்கு வருகை தந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், மாணவர்களுக்கு 'விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்கள்' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினாலும், துணை இராணுவத்தினாலும் கொல்லப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் பெயர்களும் இடம் இருந்தன. தாங்கள் கொன்றவர்களை விடுதலைப்புலிகள் தான் கொன்றதாக சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் பொய்ப்பரப்புரைகள் செய்வதுண்டு. காங்கிரஸ் மந்திரிகளான காசன் அலி, இளங்கோவன், ஞானசேகரன், மணிசங்கர் அய்யர் வரிசையில் சிதம்பரமும் சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு துணை போகிறார்.

Thursday, February 12, 2009

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

- சே.பாக்கியராசன்
கீற்று