Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, September 19, 2012
சிட்னியில் நடைபெற்ற உங்களின் கதையைச் சொல்லுங்கள் (Tell Your Story)என்ற நிகழ்வு
அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழர்களின் குரல்(Voice of Tamils) என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'உங்களின் கதையைச் சொல்லுங்கள்' (Tell Your Story) என்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன். பொதுவாக சிட்னியில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் நிகழ்ச்சி என்றால் தென்னிந்தியா தமிழ் திரைப்படப் பாடல்கள், வட இந்திய திரைப்படப்பாடல்களுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்து ஆடும் குத்தாட்டங்கள், இதிகாச நாடகங்கள், இராமர்,காந்தி என்று தான் இருக்கும். ஈழத்தமிழர்களின் அவலங்கள் இருக்காது. சென்ற வருடமும் தமிழர்களின் குரல் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு நுளைவுச்சீட்டினை வாங்கியும், தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. அந்நிகழ்வுக்கு சென்ற நண்பன் ஒருவரை அந்நிகழ்வு பற்றி அபிப்பிராயம் கேட்டேன். ஈழத்தமிழர்களும், வேற்று நாட்டவர்களும் தங்களது நாட்டின் பிரச்சனைகளை நடன வடிவில் கொண்டுவந்தார்கள். பல வெளினாட்டவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். நடுவர்களாக அவுஸ்திரெலியர்கள் கலந்து கொண்டார்கள். சேகரிக்கப்பட்ட பணம் உலகத்தமிழர் பேரவை உட்பட சில அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டதாக நண்பன் எனக்கு சொன்னார்.
இம்முறை, சென்றமாதம் 8ம்திகதி சிட்னியில் உள்ள சில்வர்வோட்டர் என்ற இடத்தில் இருக்கும் சி3 அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஈழத்தமிழர் ஒருவரும், மேற்கிந்தியா தீவுகளில் ஒன்றான ஐமேக்கா நாட்டினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
முதலில் உலகில் இன விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த மாவீர்ர்களுக்கும், போரினால் இறந்த பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. மங்கள விளக்கேற்றலின்பின்பு கரிசன் இளங்கோவன் அவர்களின் புஸ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழர்களின் குரல் அமைப்பின் தலைவர் இந்நிகழ்வு நடைபெறுவதன் நோக்கம் பற்றி சிறப்பாக உரையாற்றினார். பிரதம விருந்தினர் "இனத்தினால் வேறுபட்டாலும் நாங்கள் அனைவரும் அவுஸ்திரெலியர்கள். ஆனால் எமது மொழி அடையாளத்தினை மறக்கக்கூடாது" என்று உரையாற்றினார். இந்நிகழ்வில் ஈழம், பர்மா, தென்சூடான் போன்ற நாட்டவர்களின் கலாச்சாரம், அவலங்கள் நடனப் போட்டியாக நடைபெற்றது. பர்மா நாட்டினைச் சேர்ந்த ஒரு கிராமமக்கள் தாங்கள் வாழும் கிராமத்தில் உள்ள பெண்கள் தண்ணீர் பிரச்சனைக்காக பல தூரம் சென்று தண்ணீரை குடங்களில் பெற்று வருவதினை நடனத்தில் வெளிப்படுத்தினார்கள். தண்ணீர் எடுக்கப்போகும் போது ஏற்படும் பிரச்சனைகளை அழகாக 8, 9 வயது சிறுமிகள் நடனம் ஆடி வெளிப்படுத்தினார்கள். நடனமாடிய சிறுமி ஒருவர் இங்கு சிட்னியில் வீட்டிலேயே குழாயின் மூலமாக நீரினைப் பெறக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சியான விடயம் என்று சொன்னார்.
500 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் வயலில் இருந்தும் கடலில் மீன்பிடித்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்த இனம் தமிழினம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் வருகைக்குப் பிறகு தமிழினம் அடிமைப்பட்டு, தற்பொழுது சிங்கள இனத்தினால் அடிமைப்பட்டு இருக்கின்றது. சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களினால் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் கல்வி மறுக்கப்பட்டது. இதனால் தமிழர்கள் போராட வெளிக்கிட்டார்கள். பல வெற்றிகளைப் பெற்றார்கள். ஆனால் உலக நாடுகளின் உதவியுடன் 2009ல் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரு சில நாட்களில் கொண்டு குவிக்கப்பட்டார்கள். இவற்றை ஈழத்து கலைஞர்கள் நடன நிகழ்வின் மூலம் வேற்று இன மக்களுக்கு வெளிக்கொண்டு வந்தார்கள்.
(வட) சூடான் நாட்டு அரசினால், தென் சூடான் நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை தென் சூடான் நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி, எங்களுக்கு அவர்களின் அவலங்களைச் சொன்னார்கள். தென்சூடான் மக்களின் எழுச்சி கீதம் நடன நிகழ்வில் பாடப்பெற்றது.அண்மையில் தென் சூடான் சுதந்திர நாடாக விடுதலை அடைந்திருக்கிறது. ஈழத்தமிழர்களைப் போல 30 வருட போராட்ட அனுபவங்களை தென் சூடான் மக்களும் அனுபவித்திருக்கிறார்கள்.
நடுவர்களின் தீர்ப்பின் மூலமும், பார்வையாளர்களின் வாக்களிப்பின் மூலமும் ஈழத்து நடனம் முதல் இடத்தினை பெற்றது. 3 அமைப்புக்கும் பரிசுப்பணம் கிடைத்தது. பர்மா, தென் சூடான் கலைஞர்களுக்கு கிடைத்த 1000 வெள்ளிகளை தங்களது தாயக மக்களுக்கு உதவுவதற்காக செலவளிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த நடுவர் ஒருவர், ஸ்கொட்லாந்தின் விடுதலை பற்றியும் சொன்னார். ஈழத்துக்கலைஞர்களோடு, இந்தோனேசியா ,கானா போன்ற வேற்று நாட்டவர்களின் சிறப்பு நடனங்களும் நடைபெற்றது.
எங்களின் திறமைகளை கொண்டு எங்களின் அவலங்களை உலகுக்கு தொடர்ந்து சொல்லிவரும் தமிழர்களின் குரல் அமைப்பின் முயற்சியிக்கு தலை வணங்குகிறேன். இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட பணத்தினையும், போட்டியில் வெற்றி பெற்றதினால் கிடைக்கப்பட்ட பணத்தினையும் உலகத்தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா மருத்துவ நிதியம் போன்ற அமைப்புக்களுக்கு தமிழர்களின் குரல் அமைப்பினால் பகிர்ந்து வழங்கப்பட்டது.
Monday, March 16, 2009
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு வன்னியில் இருந்து ஒரு கண்ணீர் கடிதம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி.
"அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கிறதுக்கு காரணமே காங்கிரசின் மைய அரசுதாங்கிற கோபம் இருக்குல்ல. அத மனசுல வச்சுதான் நாங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டப்போறோம்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு அறிவிச்சிருக்காரு. இப்படியாவது தப்பிடலாங்கிற நப்பாசை. அது தமிழ்நாடு மக்கள்கிட்ட எப்படி எடுபடுதோ தெரியல. ஆனா தங்கபாலுவின் அந்த நிவாரணவசூல் அறிவிப்பு ஈழத்தமிழர் மத்தியில பெரிய ஆதங்கத்தை எழுப்பியிருக்கு. அந்த மக்கள் சார்பான ஒரு கொந்தளிப்பு கடிதம் ஒன்று வன்னியில் இருந்து நமக்கு வந்திருக்கு. வெற்றிகொண்டான் என்கிற பெயரில் எழுதியிருக்காங்க. அத அப்படியே வாசிக்கிறேன் கேளுங்க..." என்று கூறிய சித்தன் வாசிக்கத்தொடங்கினார்.
மதிப்பிற்குரிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு அவர்களே!
வணக்கம்.
உயிரைக் கையில் பிடித்தபடி நாளின் ஏறக்குறைய முழுப்பகுதியையும் பதுங்கு குழிகளுக்குள் உயிர் வற்றிப்போக ஒடுங்கிக்கிடந்து குண்டுச்சத்தமற்ற நாளையின் வரவுக்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் உங்கள் இனத்தவன் எழுதுகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில் தீவிரமடைந்து இந்த ஆண்டு மிகமிக மோசமடைந்து விட்ட 21ம் நூற்றாண்டின் மிக மோசமான மனித அவலம் என்று வர்ணிக்கப்படும் வன்னி அவலத்தின் நேரடிச் சாட்சியம் எழுதுகிறேன்.
என் இனத்தவரே!
எமக்காக நிதி சேகரிக்கிறீர்களாம். சோனியா அம்மையாரின் உத்தரவாம். பதுங்கு குழிக்குள் வாழ்க்கை என்றாலும் அறிந்தோம். அதிர்ந்தோம். சிங்களவனின் கொடிய குண்டைவிட அபாயம் நிறைந்த செய்தி.
இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள். இப்போது எங்கிருக்கிறீர்கள். எம்மீது ஏன் இந்த திடீர் அக்கறை?. எங்களை அவமானப்படுத்தாதீர்கள். தயவு செய்து எங்களை அவமானப்படுத்தாதீர்கள்.
மனசாட்சி ஒன்றிருந்தால் உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். இன்றைய எமது நிலைக்கு யார் காரணம்? உண்மையில் நீங்கள் தமிழனாக இருந்தால், அதையும் தாண்டி இந்தியனாக இருந்தால், அதையும் தாண்டி மனிதனாக இருந்தால், தமிழக மக்களின் இன்றைய அவல நிலைக்கு இந்தியா, குறிப்பாக காங்கிரஸ் கட்சியே முக்கியமான காரணம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். வாய்கூறாவிட்டாலும் மனம் கூறும்.
சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு முண்டுகொடுத்தீர்கள். இன அழிப்பு போருக்கான ஆயுத தளவாடங்களைக் கொடுத்தீர்கள். யுத்த கப்பல்கள் கொடுத்தீர்கள். பயிற்சிகள் கொடுத்தீர்கள். போர் நிபுணத்துவ உதவிகளை செய்தீர்கள். எங்களது விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கான ஆசிகளையும் ஆலோசனைகளையும் அனைத்து விதமான உதவிகளையும் பொளத்த சிங்களப் பேரினவாதப் பேய்களுக்கு செய்தீர்கள். பிளவுகளை ஏற்படுத்தினீர்கள். எம்மைப் பலவீனப்படுத்தினீர்கள். இந்திய நலன் என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சின்னஞ்சிறிய இனமான தமிழீழ தேசிய இனத்தை சிதைத்தீர்கள். கூறுபோட்டீர்கள். மனிதம் தவறிவிட்டீர்கள்.
உலகம் போற்றும் மகாத்மா காந்தியையும், அகிம்சை தத்துவத்தையும் முன்னால் காட்சிக்கு வைத்து விட்டு நீங்கள் எம்மண்ணில் செய்த அக்கிரமங்கள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று சிங்கள இனவெறி அரசுக்கு கூட்டாகத் தொடர்கிறீர்கள். அதுசரி. உண்மையில் எங்கள் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?
அரை உயிர் பறிக்கப்பட்டு, கூன் குருடு நொண்டிகளாக்கி விட்டு பின் மருந்து தருகிறீர்கள். உடை தருகிறீர்கள். இப்படி ஒரு கொடுமை நடவாமல் தடுப்பதை விட்டு கொடுமையின் விளைவுக்கு ஒத்தடம் போடுகின்றீர்கள். இது நியாயமா?...."
இப்போதாவது காங்கிரஸ் நல்லதை செய்ய முன்வந்திருக்கின்றதே. அதைக்கூட குறைசொன்னால் எப்படீ..?- கோபால்.
"அடடே...அப்படியா. அதற்கும் ஒரு விளக்கம் சூடாகவே தொடர்கிறது கேளுங்கள்..."- சித்தன் தொடர்ந்தார்.
"....உலகை எட்ட வைத்து விட்டு, போரை நடத்துவது நீங்களே என்று சிங்களத் தரப்பே தற்போது கூற ஆரம்பித்துவிட்ட நிலையில், போரை நிறுத்துவதற்கு மட்டும் அது உள்நாட்டுப் பிரச்னை என நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையின் ஆணிவேர்வரை உங்கள் கையிருக்கிறதே. மறைக்க முனையாதீர்கள். தற்போது தேர்தல் காலம். தமிழகத்தில் வினைப்பலன் கிடைத்துவிடுமா என்று அஞ்சுகிறீர்கள். அரிதாரம் பூசிக்கொண்டு வேறொரு பாத்திரத்தில் நடிக்க முற்படுகிறீர்கள்.
ஈழத்தமிழருக்காக நிதி சேகரிப்பு!.
எது எங்கள் மரணச் சடங்கிற்கா அரிசி சேகரிக்கிறீர்கள். வாய்க்கரிசிக்கா?
ஈழத்தமிழர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அது உங்களுக்கும் தெரியும். பின் யாரை ஏமாற்ற இந்த வேடம்?
யாரை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் தமிழ் உறவுகளையா? ஏமாற மாட்டார்கள்.
புளித்துப்போன அரசியல் சவடால்கள், பொய்யுரைகள் கேட்டு ஏமாந்த காலம் போயிற்று. இன்று தமிழகத்தில் புதிய இரத்தம். தமிழ் இரத்தம். மானம் கொப்பளித்துப் பாயும் இளரத்தம் ஓடுகிறது. விசயங்களுக்கு இங்கே இடமில்லை.
உண்மைகளைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். கட்சிகளுக்காகவும், கட்சித் தலைவர்களுக்காகவும் உயிரை மாய்த்த காலம் போய் இன்று இனத்துக்காக களமிறங்கியிருக்கும் சிந்தித்துச் செயல்படும் இளந்தமிழர்கள் மத்தியில் உங்கள் நரித்தனங்கள் எடுபடாது. உங்களது காலம் பாழாய்ப்போன பழைய காலம்.
இன்று புதிய மனிதர்கள். புதிய காற்று. அறிவுடை மக்கள். அழகான தமிழகம்.
தங்கபாலு அவர்களே!
கொஞ்சம் தமிழராய் சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சநேரம் போதும். கண்களை சிறிது மூடி தமிழனாய் சிந்தியுங்கள். புதிய மனிதனாய் பிறப்பீர்கள். எங்கள் அழிவில், தமிழீழ மண்ணில் கொட்டிக்கிடக்கும் எங்கள் குருதியில் துண்டங்களாய் வன்னி எங்கும் சிதறிக்கிடக்கும் எங்கள் குழந்தைகளின் எங்கள் பெண்களின் எங்கள் உறவுகளின் சதைத் துண்டங்களில் உங்களின் கை இருக்கிறது அன்பரே!
தற்போது புதிதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. போர் முடிவடைந்ததும் இலங்கை அரசு இனப்பிரச்னைக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்திருக்கிறாராம்.
போரை நிறுத்துவதில் தலையிட முடியாது. அது உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி நழுவும் இந்தியா, போர் முடிந்ததும் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பது பொருத்தப்பாடாய் இல்லை. ஆக..இந்தப் போரை இறுதிவரை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. அப்படியானால் எல்லாம் முடிந்தபின் இந்த அரிசி பருப்பு, மருந்து, பணம் என்பனவற்றை சேகரிக்கலாமே? அதுவரை உங்கள் தேர்தல் பொறுத்திருக்காது. அதனால் இப்பொழுதே தொடங்குங்கள். ஆயிரமாயிரமாய் ஓட ஆரம்பித்து நூறாய் சுருங்கி இன்று பத்தாய் துவண்டு கிடக்கிறோம். ஆனால் மண்டியிட மாட்டோம் அன்பரே.
வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கட்சி அரசியல் நடத்தும் உங்களால் இரத்தச் சகதியில் பிணங்களோடு இன்னும் உயிருள்ள பிணங்களாய்க் கிடக்ம் எங்கள் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. எங்கள் துயரங்களை அறிந்து கொள்ள முடியாது. எங்கள் பிரிவுகளை, எங்கள் அழிவுகளை, எங்கள் அவலங்களை எழுத்தில் தருவதும் முடியாது. புகைப்படங்களைக் காட்டி விளக்குவதற்கும் முடியாது. இதயங்களின் தவிப்பு, ஏக்கம், வெம்மை எப்படிச் சொல்லி புரிய வைப்போம்.
ஒன்றை மாத்திரம் உங்களிடம் வினயமாக முன்வைக்கிறேன். எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.
இந்த திறந்த மடல் உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில்...
வன்னியில்
ஆறாவது இடம்பெயர்வுக்குப் பின்
புதுக்குடியிருப்பு வடக்கில், ஒரு பதுங்கு குழியில் இருந்தபடி...
வெற்றிகொண்டான்,
15/03/2009
"இது சாதாரண கடிதம் இல்லேப்பா. ரத்தக்கண்ணீர் கலந்த கொந்தளிப்பு கடிதம்னே சொல்லணும். இதே கொந்தளிப்பு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட எழுந்தா காங்கிரசுக்கு கஷ்டகாலம்தான்" என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம். கூட்டம் கலைந்தது.
-குமுதம் முச்சந்தி

Subscribe to:
Posts (Atom)