Tuesday, January 27, 2009

தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு

தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி வவுனியாவுக்கு வந்துள்ள தமிழர்களை சரமாரியாக கொன்று குவித்து வருகிறதாம் இலங்கை ராணுவம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுபோல கொன்று பிணங்களை எரித்தும், புதைத்தும் வெறியாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான தமிழ்ப் பெண்கள் ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம்.

விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், தற்போது அப்பாவித் தமிழர்களை தாறுமாறாக வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது இலங்கை படைகள்.

பாதுகாப்பான பிரதேசம், விடுதலைப் புலிகள் பகுதியில் உள்ள தமிழர்கள் இங்கு வர வேண்டும் என அரசு விடுத்த அழைப்பை ஏற்று அப்பாவித் தமிழர்கள் பெரும் திரளாக அரசுப் பகுதிகளுக்கு வந்தது இப்போது அவர்களுக்கு பெரும் எமனாக மாறியுள்ளது.

தந்திரமாக அவர்களை வரவழைத்து விட்டு தாறுமாறாக கொன்று குவித்து வெறியாட்டம் போடத் தொடங்கியிருக்கிறது இலங்கை ராணுவம்.




வன்னி பகுதியில் 800 அப்பாவித் தமிழர்களை ராணுவம் பீரங்கிகளால் சுட்டு மகா கொடூரமாகக் கொன்று குவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், ஐ.நா. வரை எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில் வவுனியாவில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் (இவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்) கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தமிழ்ப் பெண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ராணுவ முகாம்களில் வைத்து கற்பழித்த கொடுமையும் அங்கு நடந்து வருகிறதாம்.

இதை விடக் கொடுமை, இவ்வாறு கற்பழிக்கப்பட்ட பெண்களை மிகக் கொடூரமாகக் கொன்று அவர்களது சடலங்களை மயானத்தில் புதைத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம், பொலநறுவ ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்கள், காட்டுப் பகுதிகள், வவுனியாவில் உள்ள ஆளரவற்ற பகுதிகளில் தமிழர்களின் பிணங்கள்தான் பெருமளவில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவதாக சிங்களர்களே கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 25 தமிழ் இளைஞர்களும், 27 பெண்களும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர் என அனுராதபுரம் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியபோது இப்படித்தான் தமிழர்களை வேட்டையாடியது ராணுவம். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், பெண்கள், இலங்கைப் படையினரால் கொன்று குவிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரையும் செம்மணி என்ற இடத்தில் புதைத்தது இலங்கை படை.

அப்போது யாழ்ப்பாண மாவட்ட ராணுவ அதிகாரியாக இருந்தவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் செம்மணியைப் போலவே இன்னொரு வெறியாட்டத்தை ராணுவம் நடத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.



இந்த படுகொலைச் சம்பவங்கள், கற்பழிப்புகள் குறித்து இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியை, பல்வேறு தமிழர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, 800க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழர் பகுதிகளில் கதவடைப்புப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்த கதவடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Thatstamil

Monday, January 26, 2009

எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?.

இப்பொழுது ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்வையிடும் பொழுது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை, விமானத்தாக்குதலினால் கொல்லப்படுபவர்கள் பற்றிய செய்திகளைக் கேட்கும் போது, படிக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் 10, 20 பேர் இறக்கிறார்கள் என்று வன்னியில் இருந்து செய்திகள் வரும். ஆனால் நேற்று மட்டும் 300க்கு மேல் சிறிலங்காப் படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000க்கு மேல் காயப்பட்டிருக்கிறார்கள். சிறிலங்க அரசின் மருந்துவத்தடையினால் காயப்பட்டவர்களில் பலர் உயிர்பிழைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். உலக நாடுகளில் வரும் ஊடகங்களில் சிறிலங்கா அரசின் வெற்றிச் செய்திகள் மட்டுமே வருகின்றன. தமிழர் கொல்லப்படுவது அவ்வூடகங்களில் வருவதில்லை. கொழும்பில் சிறு வெடி வெடிச்சாலும் செய்திகளை இடும் இவ்வூடகங்கள் தமிழர்கள் பகுதியில் நடைபெறும் இன அழிப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.



தமிழனைக் கொல்ல சிறிலங்கா அரசுக்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயூதங்கள் வழங்குகின்றன. தமிழ் நாட்டில் உள்ள உணர்வுள்ள சகோதரர்களும், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், கவனயீர்ப்பு நிகழ்வுகள் என்று தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகத்தின் கண்தான் திறக்கவில்லை. இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய வேணும்?. இன்று வேலையில் இருந்து கொண்டு இதனை எழுதுகிறேன். என்னால் வேலை செய்யக்கூடிய மனோ நிலையும் இல்லை. நாங்கள் என்ன செய்ய வேணும்?. தொலைபேசியில் பலர் இன்று கதைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயலாமையை எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வரும் மக்களின் இறப்புச் செய்திகளைக் கேட்க கேட்க கவலையாக இருக்கிறது. எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?. எப்பொழுது எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

Wednesday, January 14, 2009

ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கிடைத்த பரிசு

ஈழத்தமினாகப் பிறப்பது பாவமா?. மரங்களைத் தறிக்கவேண்டாம் என்று உலகம் சொல்கிறது. ஈழத்தில் அப்பாவித் தமிழர்களை கொடிய அரக்கன் இராஜபக்சா கொன்று அழிக்கிறான். இதனை உலகம் வேடிக்கை பார்க்கிறது.
ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கொழும்பில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பரிசு. 'சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'! -இளகிய மனம் படைத்தவர்கள் வாசிக்க வேண்டாம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கத்தில் வந்த சில பகுதிகள்

''30 வயது சத்யன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல வேலையில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தாங்க. தன் அடையாள அட்டையைக் காண்பித்தார் இவர். 'வழக்கமான சோதனைதான்' என்று சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ். அடுத்த வாரமே மீண்டும் வந்தார்கள், 'அதிகாரிகள் காத்திருக்காங்க!'ன்னு கூப்பிட்டாங்க. 'போன வாரமே விசாரணை முடிந்துவிட்டதே' என்று சத்யன் சமாளிக்கப் பார்க்க, ராணுவ உடுப்பில் இருந்த ரெண்டு பேர் உள்ளே வந்தாங்க. 'என்னமோ நடக்கப் போகுது' என்று சத்யனுக்குப் புரிஞ்சிருக்கு. உடை மாற்றிக்கொள்ளக்கூட விடாம, லுங்கி, டி-ஷர்ட்டுடன் அழைத்துப்போனாங்க. அப்போ மணி ராத்திரி 9 இருக்கும். வெளியே வந்த சத்யன் முன் பளீரெனக் காத்திருந்தது வெள்ளை வேன்!கண்ணைக் கட்டியபடி 3 மணி நேரப் பயணம். ஒரு கட்டடத்தின் முன் வேன் நிற்க, சத்யனை உள்ளே இழுத்துட்டுப் போனாங்க. அவரை நிர்வாணமாக்கி ஒரு கல்லின் மேல் உட்காரவெச்சு, அவர் கைகளைப் பின்னாடி கட்டிட்டு விசாரணை ஆரம்பிச்சது. 'சொல்லு, உனக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?'னு முதல் கேள்வி. 'நான் கொழும்புல வேலை பார்த்துப் பிழைக்கிறவன். எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சத்யன் பதில் சொல்ல, அந்தக் கல்லோடு சேர்த்து அவரது ஆண் குறியின் முனையை பூட்ஸ் காலால் நசுக்கினாங்க. ரெண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால், அவரால எதுவும் செய்ய முடியலை. தனக்கு எதுவும் தெரியாதுன்னு கதறிட்டே இருந்திருக்கார்.'இப்ப உனக்கு ஒரு செகண்ட் கரன்ட் ஷாக் கொடுப்போம். ரெண்டு செகண்ட் கொடுத்தா நீ செத் துடுவ'ன்னு சொல்லிட்டு, மின்சார வயரை சத்யனின் ஆண் குறியில் வெச்சிருக்காங்க. மிருதுவான அந்தப் பகுதி வழியா ஹைவோல்டேஜ் மின்சாரம் உடம்பில் ஊடுருவும் ஒவ்வொரு நொடியும் மின்சார நரகம். கரன்ட் பாய்ஞ்சு உடம்பு மொத்தமும் துடிக்கும்போது, ஒரு ரப்பர் பையை அவரது முகத்தைச் சுற்றிக் கட்டிஇருக்காங்க. அந்தப் பை முழுக்க பெட்ரோல். வலியால் வாயைத் திறந்து ஒருவன் கத்தும்போது, பெட்ரோல் வாசம் பிடிச்சா எப்படி இருக்கும்? அந்தச் சமயம் பெட்ரோல் வயித்துக்குள்ளே போவதையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மொத்த பெட்ரோலும் உள்ளே போயிருச்சு. அடுத்த ஒரு மணி நேரம் அவங்களுக்கு ரெஸ்ட். இவர் வேதனையில் துடிச்சிட்டு இருப்பாரு.ரெஸ்ட் முடிஞ்சு வர்றாங்க. 'சொல்லு, கொழும்புல எங்கெல்லாம் குண்டு வெச்சிருக்கீங்க?' - இது ரெண்டாவது கேள்வி. 'எனக்குத் தெரியாது'ன்னு இவர் சொல்லவும், கால்ல கயித்தைக் கட்டி தலைகீழாத் தொங்கவிட்டிருக்காங்க. லிட்டர் லிட்டரா பெட்ரோல் குடிச்சவரைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கொஞ்சமா வாய், மூக்கு வழியா பெட்ரோல் ஒழுகுது. இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கு. அப்புறம் அவரைக் கீழே இறக்கி கை ரெண்டையும் பின்னாடி வெச்சு, ரெண்டு பெருவிரலை மட்டும் சேர்த்து கயித்துல முடிச்சுப் போட்டு மேலே தூக்கியிருக்காங்க. பின்பக்கம் கையை வளைச்சாலே வேதனை தாங்க முடியாது. ரெண்டு பெருவிரல் பலத்துல மொத்த உடம்பும் அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, எப்படி இருக்கும்? உடல் கனம் தாங்க முடியாம ரெண்டு பெருவிரலும் ஒடிஞ்ச பிறகுதான், அவரைக் கீழே இறக்கியிருக்காங்க. அதுக்கு மேலயும் கஷ்டத்தைத் தாங்குற சக்தி அவர் உடம்புல இல்லை. உயிர் எங்கோ ஒளிஞ்சுட்டு இருக்குற பிணமாக் கெடந்தார்.திரும்ப வந்தவங்க ரெண்டு கையையும் கட்டி மறுபடியும் தூக்குறாங்க. அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிற மனநிலையில்கூட அவர் இல்லை. அவரோட ஆசன வாயில் பி.வி.சி. பைப்பைத் திணிச்சிருக்காங்க. வேதனையில அலறியிருக்கார். அடுத்து இரும்பு வேலிக் கம்பியைக் கையில் எடுத்திருக்காங்க. (இதற்கு மேலான விவரங்கள் மனவலிமை கொண்டவர்களையும் நொறுங்கச் செய்யும் என்பதால், அவற்றைத் தவிர்க்கிறோம்!)இப்படி ரெண்டு ராத்திரிகளைச் சோறு தண்ணி இல்லாமக் கழிச்சிருக்கார். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது. குப்புறப் படுத்தா கரன்ட் ஷாக் கஷ்டம், நிமிர்ந்து படுத்தா வேலிக்கம்பி வேதனை. என்ன பண்ண முடியும்? ரெண்டாவது ராத்திரி அவருக்கு லேசாத் தூக்கம் வர்ற மாதிரி இருந்திருக்கு. அப்ப ஜில்லுனு ஐஸ் தண்ணியை ஊத்தியிருக்காங்க. தூக்கம் தொலைஞ்சு வேதனை வெடிச்சிருக்கு. எழுப்பி 'ஒரு நாள் ரெஸ்ட் எடு'ன்னு சொல்லி ஒரு இடத்துல வெச்சுப் பூட்டியிருக்காங்க.சவப்பெட்டி அளவுக்கான செல் அது. ஒரு ஆள் உள்ளே படுத்துக்கலாம். அசைய முடியாது, புரண்டு படுக்க முடியாது. இந்த மாதிரியான செமிட்டிக் செல் அங்கே நிறைய இருக்காம். படுத்திருக்கும் தளத்தில் கூர்மையான கல்லும் கண்ணாடித் துகள்களும் கொட்டிக்கிடக்குமாம். இந்தச் சித்ரவதையைத் தாங்கி உயிர் மிஞ்சுமா என்ன? வெள்ளை வேன்ல ஏறாததால நான் உங்க முன்னாடி பிழைச்சுக் கெடக்கேன்!'' என்று வேதனையும் விரக்தியுமாக வெதும்பினார் அவர்.இன்னமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்ரவதைகள், ஹிட்லரின் நாஜி கேம்ப் கொடுமைகளைவிடக் கொடூரமானவை. வெள்ளை வேன் பயணம் மின்சார அடுப்பில் முடிவதாக மனித உரிமை அமைப்பினர் பயமுறுத்துகிறார்கள். இதில் பெண்கள் என்றால், பாலியல்ரீதியான சித்ரவதைகளுக்கும் அதிக முனைப்பு காட்டப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'கொழும்பில் புலிகளின் மனித வெடிகுண்டுகள் நடமாடுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் புலிகள் இன்னும் 'கெரில்லா' தாக்குதலை நடத்தி வருகிறார்கள்' என்பதுதான் தமிழ் இளைஞர்கள் மீதான இந்த விசாரணைகளுக்கான காரணங்கள்.காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஆணையக் குழு உறுப்பினர் ராஜித் சேனாரட்சணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது போன்ற சித்ரவதைகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பூசா முகாமுக்கு ராஜித் சென்றார். அங்கு தமயந்தி என்ற பெண் தனது 6 மாதக் குழந்தையுடன் இருந்தார். 'என் வீட்டுல துப்பாக்கி இருந்ததாச் சொல்லி இங்கே அடைச்சிருக்காங்க. நான் துப்பாக்கியைப் பார்த்ததே இல்லை' என்றார். இரண்டு செல்போன் வைத்திருந்தார், அடையாள அட்டையில் கிளிநொச்சி என்று இருந்தது போன்றவை அவர் கைதுக்கான காரணங்கள். இதனால் எல்லாம்தான் உலகில் இராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமைகளை மீறும் இரண்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்களுக்கு சிங்கள அரசு வழங்கிய தமிழ்ப் புத்தாண்டுப் பரிசு