Monday, January 26, 2009

எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?.

இப்பொழுது ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்வையிடும் பொழுது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை, விமானத்தாக்குதலினால் கொல்லப்படுபவர்கள் பற்றிய செய்திகளைக் கேட்கும் போது, படிக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் 10, 20 பேர் இறக்கிறார்கள் என்று வன்னியில் இருந்து செய்திகள் வரும். ஆனால் நேற்று மட்டும் 300க்கு மேல் சிறிலங்காப் படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000க்கு மேல் காயப்பட்டிருக்கிறார்கள். சிறிலங்க அரசின் மருந்துவத்தடையினால் காயப்பட்டவர்களில் பலர் உயிர்பிழைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். உலக நாடுகளில் வரும் ஊடகங்களில் சிறிலங்கா அரசின் வெற்றிச் செய்திகள் மட்டுமே வருகின்றன. தமிழர் கொல்லப்படுவது அவ்வூடகங்களில் வருவதில்லை. கொழும்பில் சிறு வெடி வெடிச்சாலும் செய்திகளை இடும் இவ்வூடகங்கள் தமிழர்கள் பகுதியில் நடைபெறும் இன அழிப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.



தமிழனைக் கொல்ல சிறிலங்கா அரசுக்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயூதங்கள் வழங்குகின்றன. தமிழ் நாட்டில் உள்ள உணர்வுள்ள சகோதரர்களும், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், கவனயீர்ப்பு நிகழ்வுகள் என்று தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகத்தின் கண்தான் திறக்கவில்லை. இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய வேணும்?. இன்று வேலையில் இருந்து கொண்டு இதனை எழுதுகிறேன். என்னால் வேலை செய்யக்கூடிய மனோ நிலையும் இல்லை. நாங்கள் என்ன செய்ய வேணும்?. தொலைபேசியில் பலர் இன்று கதைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயலாமையை எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வரும் மக்களின் இறப்புச் செய்திகளைக் கேட்க கேட்க கவலையாக இருக்கிறது. எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?. எப்பொழுது எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

3 comments:

  1. தமிழா தமிழா நாளை நம்நாடு...

    ReplyDelete
  2. நெஞ்சு வெடிக்கிறது

    ReplyDelete
  3. Indians often proved that they are the main barrier to our freedom. Especially, Indian Brahmins are the most powerful society and rule everything – Politics, media, RAW.........

    Only some sensible TN Tamils support our struggle.

    ReplyDelete