Wednesday, March 25, 2009

எவ்வளவு காலம் காங்கிரஸ் இளங்கோவன் பொய் சொல்லப்போகிறார்?


பிரணாப் முகர்ஜி இலங்கை போன பின்னர்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்ற பொய்யை காங்கிரஸ்காரர்கள் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 48மணித்தியாலம் போர் நிறுத்தம் செய்யவில்லை. மக்கள் வெளியேற 48 மணித்தியால கெடுதான் சிறிலங்கா அரசு அறிவித்தது. அதனை சிங்கள இராணுவம் உறுதி செய்தது.அந்த 48மணித்தியாலத்தில் சிறிலங்காப்படைகளினால் கொல்லப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 100யும் தாண்டும்.

இதோ இளங்கோவனின் பொய்யுரை--

கோபியில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தற்போது சிறு சிறு கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளின் நாடியை பிடித்து பார்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றால் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்களுக்குத் தான் நஷ்டம்.

சத்தி-சாம்ராஜ் நகர் ரெயில்வே திட்டப்பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இதற்கான திட்டப்பணி தடைபட்டு கிடக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் பணியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்ற 48 மணி நேரத்துக்கு பின்பு தான் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன் வந்ததது.
பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளையும், தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகள் செய்த சாதனையையும் சொல்லி வாக்கு கேட்போம். திமுக -கங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனறார்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது என்றும் மேலும் பொய்யுரைக்கும் இளங்கோவனின் காங்கிரசு அரசு தான் தமிழர்களைக் கொல்ல நடவடிக்கை எடுக்கிறது. இவரின் பொய்யுரை கேட்க நல்லகாலம் பெரியார் இப்பொழுது உயிருடன் இருக்கவில்லை.

8 comments:

 1. தமிழன், ஒன்னு இந்தியாவில் இருந்து முழூமையாயாக வெளியே வரவேண்டும் இல்லை தன்னாட்சியாக செயல்படவேண்டும்
  தனக்கென்று முப்படை, ஆயுதம், இந்தி ஆதிக்கம் இந்திவார்தை இல்லாத தமிழகமாக திகலவேண்டும், ஒரு இந்தி மாநிலத்தில் என்றாவது தமிழை எந்தவழியிலாவது அனுமதிப்பார்களா, அப்படியிருக்க இந்தியை மட்டும் இறையாண்மை, தேசியம் என்று பொய் சொல்லிநம் மேல் திணித்துகொண்டுயிருக்கிறார்களே அது எந்த விதத்தில் நியாயம் மேல், அன்று இந்தியை எதிர்க்க அண்ணாதுரை, பெரியார் போன்ற உன்னத தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் இன்று தமிழன் தன் இனத்தை காப்பாற்றகூட திராணியில்லாமல் புலம்பிகொண்டுயிருக்கிறான்
  இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஒரே வகைதான்
  இந்தியா மறைமுகமாக தமிழை அழித்துகொண்டு வருகிறான்
  இலங்கை தமிழைனை அழித்துகொண்டுயிருக்கிறான்
  ஒருத்தன் கருப்பா பயங்கரமா இருக்கான்
  இன்னொருத்தன் பயங்கர கருப்பா இருக்கான்

  ReplyDelete
 2. உங்கள் கருத்துக்கு நன்றிகள் தாமிரபரணி.
  தமிழர்களுக்கு ஒரு நாடு அமைவதன் மூலமே தமிழைக் காப்பாற்றலாம்.

  ReplyDelete
 3. TN congress leaders(??)will do anything to be in
  the good books of Sonia.
  They are a bunch of shameless jokers.
  Along with Rajapakse,TN congress leaders should also be accounted for genocidel war-crimes on Tamils in SL

  --Senthil

  ReplyDelete
 4. //தமிழர்களுக்கு ஒரு நாடு அமைவதன் மூலமே தமிழைக் காப்பாற்றலாம்.//

  உண்மை...

  ReplyDelete
 5. தாமிரபரணி said... "...கருப்பா பயங்கரமா ....
  பயங்கர கருப்பா..."
  ஆங்கிலத்திலேயே "Black is beautiful" என்றும் "கருப்புத்தான் எனக்கு பிடித்த கலரு..." என்று பாடிய பாட்டையும் நாம் நினைவு கூரலாம். Bah Bah Black sheep என்று சிறுவயதிலேயே நிறப் பகைமை கொண்ட வெள்ளை அமரிக்கர், ஆபிரிக்க வம்சவழியினரை கேவலப் படுத்தியதை ஆங்கிலேயர் இங்கும் பரப்பினர். கறுப்பு ஆடு, கறுப்பு பணம், கறுப்பு சந்தை என்று கறுப்பு என்றால் கெட்டது, பயங்கரம் என்றெல்லாம்நம் கறூப்பு வெள்ளையர்கள் பூச்சாண்டி காட்டுகிறார்கள்!
  என் கறுப்புச் சட்டையில் ஏதோ வெள்ளை பட்டு அசிங்கமாக்கிவிட்டதே!
  இனியும் நாம் கறுப்பு அல்லது கருமை என்றால் பயங்கரம், அல்லது கெட்டது என்று கருத்துக் கொள்வதை தவிர்ப்போம்!

  ReplyDelete
 6. //TN congress leaders(??)will do anything to be in
  the good books of Sonia.
  They are a bunch of shameless jokers.
  Along with Rajapakse,TN congress leaders should also be accounted for genocidel war-crimes on Tamils in SL

  //
  ஈழத்தமிழர்களின் அழிவிற்கு காங்கிரசும் ஒரு காரணம்தான். சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு துணைபோகிறது காங்கிரசு அரசு.

  ReplyDelete
 7. நான் இந்தியாவை வெறுக்கிறேன்.

  நான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.

  நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்

  I HATE INDIA.

  I ASHAME TO BE AN INDIAN.

  I DONT WANT TO BE AN INDIAN.

  AND I DONT WANT MY COUNTRY (TAMILNADU) TO BE A PART OF INDIA.

  ReplyDelete
 8. USA lottery visa information available at WWW.USATAMIL.COM

  ReplyDelete