Monday, May 25, 2009

காந்தி தேசமே! இது நீதியா?

வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம்.

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு?

ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும்
மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும்
ஒரு செய்தியை ஆறுதல் தகவலை இப்போது சர்வ தேசம் கூற முற்படுவதாகத் தெரியவருகின்றது.

இலங்கை யுத்தத்தில் இடம்பெற்றவை என்று கூறப் படும் போர்க் குற்றங்கள் குறித்து விசேடமான விசாரணை கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரே ரணை ஒன்று நாளை ஜெனீவாவில் நடைபெற விருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசேட கூட்டத்திற்கு வரவிருப்பதாகத் தெரிகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விட யத்தை மனித உரிமைகள் கவுன்ஸிலில் விசேட விவ காரமாக ஆராய்வதற்கான பிரேரணையாகக் கொண்டு வருவதற்குத் தேவைப்படும் மேலும் பதினாறு உறுப்பு நாடுகளின் ஆதரவை இதற்குப் பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,மெக்ஸிக்யோ, மொரிஸியஸ், நெதர்லாந்து, கொரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், உருகுவே போன்ற நாடுகளே அவை.
எனினும், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் மொத்தமாக அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் தனக்கு ஆதரவான தேசங்களை ஒன்று திரட்டி, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் கவுன்ஸி லின் முன் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் கொழும்பும் இறங்கியிருப்பதாகத் தகவல்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலே ஷியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவூதி அரே பியா, எகிப்து, நிக்கராகுவா, பொலீவியா போன்ற தேசங் களே இலங்கைக்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின் றன என்று கூறப்படுகின்றது.
எனினும், இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்குத் தன்வசம் உள்ள ஆயுதம் ஒன்றை அமெரிக்கா கடைசி நேரத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வன்னிக் களத்தில் இறுதி நேர யுத்தம் எவ்வாறு கொடூரமாக குரூரமாக முன்னெடுக்கப்பட்டது என்ப தைத் தனது செய்மதி உளவுத் தகவல்கள் மூலம் மிகத் துல்லியமாகவும், துலாம்பரமாகவும் அமெரிக்கா பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சர்வ தேசப் போரியல் குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படக் கூடிய பல அம்சங்கள் ஆதாரத்தோடு தெளிவாக அவற் றில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை விடயத்தைப் போரியல் குற்ற விசார ணைக்கு உட்படுத்தக் கூடாது என வாதிடும் தேசங் களுக்கு இந்த ஆதாரங்களின் ஒரு பகுதியைக் கடைசி நேரத்தில் அமெரிக்கா கசிய விட்டு விட்டு, இந்த விட யங்கள் குறித்தா விசாரிக்கக் கூடாது என வாதிடுகின் றீர்கள் என அமெரிக்கத் தரப்புக் யேள்வி எழுப்பும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கொழும்புக்குத் துணை போனது பாரதம்.

இப்போது, அந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து நடைபெறக் கூடிய சர்வதேசவிசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத் திடம் இருந்து கிடைக்கக்கூடிய நீதிக்கும் வேட்டு வைக்க முயல்கிறது அதே பாரதம்.

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த இழைத்து வருகின்ற இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு முண்டு கொடுத்ததன் மூலம், ஈழத் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் கொடூரத்துக்குத் துணை போன தமிழக சக்தி களும், கட்சிகளும் இப்போது சர்வதேசவிசாரணைகள் மூலம் ஈழத் தமிழருக்கு நீதி கிடைப்பதை முட்டுக்கட்டை போட்டுத் தடுக்கும் கொடுமையில் இந்தியா ஈடுபடும்போது என்ன செய்யப் போகின்றன?

ஈழத் தமிழர்களின் விடயத்தைப் பொறுத்தவரை பாரதம் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செசாயாமல் இருந்தால் போதும். ஈழ யுத்தத்தில் கொழும் புக்கு நேரடியாகத் துணைபோய், அதன் மூலம் உபத் திரவம் செய்த இந்தியா, இப்போது ஈழத் தமிழர்களுக்கு இறுதியில் நீதி, நியாயம் செய்யக்கூடிய சர்வதேசநீதி மன்ற விசாரணைக்கும் தடைக்கல் போடுவதன் மூலம் தனது உபத்திரவத்தைத் தொடர முயல்கின்றது. காந்தி தேசமே! இது உனக்யே நீதியா?

- உதயன்

No comments:

Post a Comment