Tuesday, June 2, 2009

86வது அகவையில் காலடி வைத்திருக்கும் தமிழனத்தலைவர் திரு. மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


உலகத்திலே 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து கின்னஸ் சாதனை பெற்ற தமிழனத்தலைவன் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழினத்தலைவர் அவர்களின் உண்ணாவிரதம் காரணமாக சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய யுத்தத்தை நிறுத்தியதாக தமிழினத்தலைவரின் ஊடகங்கள் (சன், கலைஞர், தினகரன், முரசொலி) செய்தி வெளியிட்டது தெரிந்ததே. இதை நம்பி தமிழ் நாட்டு மக்கள், சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகளைச் செய்து, ஈழத்தமிழர்களையும், அப்பாவித் தமிழக மீனவர்களையும் கொலை செய்யக் காரணமாக இருந்த காங்கிரசுக் கூட்டணியை தமிழ் நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 28 இடங்களில் வெற்றி பெற வைத்து மீண்டும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு தந்ததும் தெரிந்ததே.

பி.கு - உண்ணாவிரதம் முடிந்தபின்பு தான் அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

9 comments:

  1. மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே

    தமிழனைக் காக்கும் தலைவன் நானே
    உலகத்தமிழருக்கும் தலைவன் நானே
    அன்று முதல் இன்று வரை தமிழருக்காய்
    குரல் கொடுக்கும் தலைவனும் நானே
    தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே

    எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய்
    தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று
    தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று
    தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி
    கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும்
    நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன்
    செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன்

    நிதியின் மேல் கருணை கொண்டு
    நீதிக்கு தீ வைத்தவனே
    நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ
    ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று
    சோனியா கொடுக்கும்மென்று சொல்லி
    தமிழகத்தின் காதில் பூச்செருகும் நீயா தமிழன்

    ஈழப்பிரச்சனையில் தூக்கம்போல் இருந்த உன்னை
    தீண்டிப் பார்த்தாள் ஜெ
    ஜெ தன் வாக்கையெல்லாம் வழித்துத் துடைத்திடுவாளோ
    என்று அச்சம் கொண்டு இல்லை இல்லை
    எப்படிப் போட்டால் தமிழகம் வாய்பிளக்கும்
    என எண்ணி கனாவொன்று நான் கண்டேன்
    ஈழத்தமிழன் போரில் அல்லல் படுகின்றான்
    என் கண்கள் குளமாகி கரைதாண்டிச் சென்று
    ஈழத்தமிழர் துயர் துடைப்பேன்
    இன்றேல் கதிரையைக் காலி செய்வேன்
    நாடகத்தை அரங்கேற்றி
    சங்கிலிபோராட்டமும் செய்து தமிழகத்தை
    உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து
    ஜெ யின் தீண்டுதலை மழுங்கடித்தபோது

    தமிழரெல்லாம் கருணைக்கடல் இங்கே
    கருணாநிதியாய் வந்தென்று பட்டதுயரெல்லாம்
    பனிபோலக்கரையும் மென்று நம்பியுனை ஏமாந்தார்
    நம்பிக்கைத்துரோகி யென்று யாரும் நினைத்ததில்லை
    இனி யாரும் நம்பி உன் பின்னால் வழித்தொடருவானோ

    தமிழகம் இரங்கிக் கொடுத்த மருத்துப்பொருட்களை
    ஈழத்தமிழனுக்கு கிடைக்காமல் தடுத்தபோது
    பழநெடுமாறனும் உண்ணாவிரதத்தால் முயற்சி கொண்டபோதும்
    இதை இன்னும் அனுப்பாமல் கிடப்பில் இருக்கும்போது

    காந்தி வழி வந்த கருவறைக்கூட்டம்
    ஈழத்தமிழனின் கருவறை கலைத்திட நீ
    பாவம் பரிதாபமென்று இழவு வீட்டிற்கு
    சாப்பாடு போட்டாயோ? - அல்லது
    உன் பக்கம் தமிழகத்தை திருப்ப நினைத்தாயோ

    சிங்களச் சிப்பாய் சரத் பொன்சேகா - உன்னை
    கோமாளியென்று ஒரு வார்த்தையில் சொன்னபோது
    மொத்தத் தமிழினமும் வெகுண்டெழுந்தபோது
    நீ பெட்டிப் பாம்பு போல் சுருண்டு படுத்தபோது
    உறைந்தது தமிழனின் குருதிநாளம்

    சீ இப்படி ஒரு தலைவனா தமிழனுக்கு
    வெட்கி தலை குனிந்தது தமிழகம்
    வீறு கொண்ட புலித்தலைவன் போல்
    எமக்கொரு தலைவன் இல்லையே - என்று
    சோகம் கொண்டது தமிழகமல்ல தமிழினமும் தான்

    தமிழனைக் தாக்கும் தலை நாயே
    உலகத்தமிழரைத் தாரை வார்க்கும் நாயே
    அன்று முதல் இன்று வரை தமிழரின்
    குரல் வளை அறுக்கும் தலை நாயே
    தமிழனுக்கு ஒரே ஒரு தலை நாயே

    சாகாவரம்பெற்று வாழப்பிறந்தது போல்
    சொத்துக்கள் சேர்க்கும் திறன் கொண்டாய்
    மதிக்குமா? உன்னை மானம் உள்ள தமிழினம்
    மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே
    இல்லை இல்லை இல்லவே இல்லை
    குளித்து புத்தாடை அணிந்து இனிப்புப் பரிமாறி
    கொண்டாடும் அந்த நாள் நாளையாக இருக்கக்கூடாதா

    ReplyDelete
  2. கலைஞர் செய்த சாதனைகளை கவியாக வடி்ப்பவர்கள் இந்த சாதனையையும் தயவு செய்து சேர்ந்திடுங்கள். உலகில் அவர் புரிந்த மிகப்பெரும் சாதனை இது.

    ஈழத்து உறவுகளை
    இரக்கமின்றி அழிப்பதற்கு
    வாழ்த்தோடு ஆதரவையும்
    வளமுடன் வாரிவழங்கிய எம்
    தமிழக முதல்வரே!
    வாழ்விழந்து நாம் போக - நீர்
    வாழ்ந்திடுவீர் பல்லாண்டு
    வாழ்த்துகிறோம் குருதி படிந்த கைகளால்….

    - புதைகுழியிலிருந்து

    http://www.meenagam.org/?p=4442

    ReplyDelete
  3. இந்த நாயின் இறப்பே தமிழர்களின் தீபாவளி, பொங்கல் புதுவருடம். உலகறிந்து மூன்று பொண்டாட்டி களவாக எத்தனையோ? திரிஷாவின் கையைத் தடவிய 86 வயது மன்மதனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கவிதை - இளங்கவி


    கலைஞரே வாழ்க வாழ்க
    தமிழின் காவியத்தலைவனே வாழ்க
    எண்பத்தாறு வருடங்களை
    தமிழருக்காய் அர்ப்பணித்த
    தமிழ் நாட்டுச் சிங்கமாம்
    நீ தமிழினத்தின் தங்கமாம்...?

    விடிவெள்ளியாய் நினைத்து
    விளக்கின்றிக் காத்திருந்தோம்
    எரி நட்சத்திரமாய் விழுந்து
    ஈழத்தின் குலையறுத்தாய்
    குடும்பப் பாசத்துக்காய்
    உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய்
    எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய்
    இன்றுவரை உயிர் வாழ்வாய்....

    ஈழத்தில் நிலத்தினிலே
    குரும்பையெல்லாம் கருகிவிழ
    வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய்
    நீயோ வேண்டுமந்த பதவியென்றாய்
    எதிரியின் தீயிலே நாமெரிய
    நீ வேண்டிய பதவிபெற்றாய்
    வேண்டியதை பெற்றதனால்
    பிறந்த நாளும் கொண்டாடிடுவாய்

    தமிழினத்தின் புல்லுருவி
    உனக்குத் தெரியுமா...?
    பிறக்கும் நாள் முன்னே
    இறக்கும் நாள் வந்த
    ஆயிரமாம் சிசுக்களின்
    அவலக்குரல்கள் கேட்கலையா....?
    அழுகுரலின் மத்தியிலும்
    பிறந்த நாள் வேண்டும் தான் ;ஏன்
    அது உன் ஆயுள்வரை வேண்டும் தான்...!

    எங்கள் சவங்களின் மத்தியிலே
    சாம்ராஜ்ஜம் அமைத்தவரே
    எங்கள் சாவொலியின் மத்தியிலும்
    அமைதியாய் தூங்கிடப்பா....
    ஆனாலும் அந்த இரவின் நிசப்தத்தில்
    இந்துமா கடலின் அலையோசை கேட்டுபார்
    இன்னும் சில குரல்கள்
    ஈழத்தில் உன் பேர் சொல்லி நிற்கும்
    ஆம்..! கருணா நிதி பார்ப்பார்
    எங்களை என்றும் காப்பார்...?

    நீ வாழ்க்கையில் ஜெயித்தாலும்;தமிழன்
    மனங்களிலே தோற்றுவிட்டாய்
    மாறாத வடுவெல்லாம்; நம்
    மனங்கலிலே விதைத்துவிட்டாய்....
    இருந்தும்; வீரம் விழைந்து நிற்கும்
    ஈழத் தமிழனாய் வாத்துகிறேன்
    கோடி ஆயுள் பெற்று
    கோழையாய் இருந்திடப்பா...
    துரோகியெனும் பெயர் நீங்க
    நல்லவராய் மறுபடியும் பிறந்திடப்பா..!

    இளங்கவி

    ReplyDelete
  5. டேய் கிழட்டு பாடு கந்தப்பு போய் வேலையை பாருடா ஆஸ்தேரிலியாவில் தட்டு கழுவி விட்டு பின்னர் இந்தியா சுதந்திர அடைந்தைதை தொடர்பாக கதைகள் பேசுடா நாடு இல்லாத அதியே திருந்துடா

    ReplyDelete
  6. // ஓம் நானும் இந்தியா சீனா மீது கடும் சீற்றதுடம் இருக்கிறேன்//

    போடா புண்ணாங்கு நீ பெரிய இவன் சீற்றம் கொண்டா என்ன ஆவ போவுது?? சீற்றதுடன் இருக்கிறானாம், போங்கடா நீங்களும் உங்க அகதி வாழ்கையும்.

    ReplyDelete
  7. கெதியில சிறீ லங்காவும் சைனாவும் சேர்ந்து வைப்பான் இந்தியாவுக்கு பாரு ஆப்பு. அப்ப தட்டு கழுவுற அகதிதமிழன் மகிமை தெரியும்.

    ReplyDelete
  8. சோனியாவின் அரியணையின் விசுவாசியாக மாறி ஈழத் தமிழினத்தின் உயிரிற்கு துளியெனவும் மதிப்பளிக்காது சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்து கூட்டிக்கொடுத்து பாத சேவை செய்த பஞ்சமா பாதகன், நயவஞ்சக தமிழினத் துரோகி... இவனுடைய சாவுச் செய்தியை மட்டும் பதிவு செய்யுங்கள்.எமது மக்களை சிங்கள இன வெறியர்களிடம் அடிமையாக்கிய இந்தியாவின் அழிவில் தான் எமக்கு விடிவு. எமது இலட்சியமும் கூட...

    ReplyDelete
  9. //தமிழருவி மணியன் ஈழத்தமிழர்களின் அழிவுக்கு காங்கிரசு தான் காரணம் என்று சொல்லி கட்சியில் இருந்து விழகியவர். ஈழ ஆதரவாளர். ஆனாலும் அவர் காந்தியினால் தான் இந்தியா சுதந்திரம் கிடைத்தது என்ற பிழையான கருத்தை நம்புபவதினால் அகிம்சை பற்றிக் கதைக்கிறார்.//

    மிஸ்டர் அகதி,
    இந்தியாவிற்க்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது ? பரதேசி போல செத்து போன தேசிய தலைவர் தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? போய் தட்டு கழுவுற வேலையை ஒழுங்கா பாருங்கடா

    ReplyDelete